கொரோனா தொற்றை குறைப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படவில்லை. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னையில் தொற்று இருந்தாலும் முன்பிருந்த நிலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. முன்பிருந்த சூழ்நிலையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழகத்தில் கொரோனா தற்போது பல மடங்கு குறைந்துள்ளது என்பதை கூறலாம்.
இருப்பினும் முற்றிலும் அதை குணப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த சூழ்நிலையில் கொரோனா தொற்றை குறைக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை, கோவை, காஞ்சி, செங்கல்பட்டு, ஈரோடு, திருவள்ளூர், சேலம் மாவட்டங்களில் சிறப்பு கவனம் தேவை என்றும், மக்கள் மாஸ்க் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தனிமனித இடைவெளி இல்லாமல் மக்கள் கூடுவதை தடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு தெரிவித்துள்ளது.