Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மக்களுக்கு…. மகிழ்ச்சி தரும் செய்தி வெளியானது….!!!!

தமிழகத்தில் நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து விதமான நோய்களில் இருந்து மக்களை காப்பதற்கும் பல்வேறு முயற்சிகளை அரசு செய்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் தற்போது வரை நிமோனியா காய்ச்சல் வராமல் தடுக்கும் நியூமோகோக்கல் கான்ஜுகோட் தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படாமல் இருந்தது.

மூன்று தவணைகளில் போடப்படும் இந்தத் தடுப்பூசியால் தனியார் மருத்துவமனைகளில் தவணைக்கு ரூ.4000 வீதம் ரூ.12,000 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வரும் 23ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக நிமோனியா தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்பட இருக்கிறது. இந்த செய்தி தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories

Tech |