தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது முதல் மக்களுக்கான பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். அவருடைய திட்டங்கள் அனைத்தும் மக்கள் அனைவருக்கும் சமமான முறையில் கிடைக்கும் வகையில் உள்ளது. இந்த வரிசையில் இந்தியாவிலேயே முதல் முறையாக வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மருத்துவம் பார்க்கும் “மக்கள் தேடி மருத்துவம்” என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் நோயால் அவதிப்பட்ட மக்களுக்கு வீடு தேடி சென்று மருந்து பெட்டகம் வழங்கப்படும். அதாவது சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவதோடு மாதம்தோறும் மருந்து மாத்திரை பெற நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது.
அதனால் வயதானவர்கள் நோயால் பாதிக்கப்பட்ட பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு சுலபமான முறையில் மருந்துகள் கிடைக்க இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கிறது. இந்நிலையில் இந்த திட்டம் குறித்து அமைச்சர் மா சுப்பிரமணி கூறியது, தமிழ்நாட்டில் தொலைதூர மலை கிராமங்களுக்கும் மருத்துவ சேவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மகப்பேறு சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு யோகா பயிற்சி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. யோகா பயிற்சி மூலம் கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவம் அதிகரிக்கும். மேலும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் தமிழகத்தில் 7 லட்சம் பேருக்கு மருத்துவ பெட்டகங்கள் வழங்கப் பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.