Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் இயங்க தடை…. அரசு உத்தரவு….!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் செயல்பட அனுமதி கிடையாது. நியாயவிலை கடைகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்படும். காய்கறி, இறைச்சிக் கடைகள் மற்றும் மளிகை கடைகள் பகல் 2 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதி. பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் பகல் 12 மணிவரை அனுமதிக்கப்படும்.

உயிரியல் பூங்காக்கள், வணிக வளாகங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் செயல்பட அனுமதி கிடையாது. நடைபெற்றுவரும் கட்டிடப் பணிகள் அனுமதிக்கப்படும். உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி. தேனீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி. அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும். சாலையோர உணவகங்கள் செயல்பட அனுமதி கிடையாது. நியாயவிலைக் கடைகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்படும்.வருகின்ற திங்கட்கிழமை காலை 4 மணி முதல் 24ஆம் தேதி காலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு மற்றும் அதனை சார்ந்த செயல்பாடுகளுக்கு அனுமதி. இன்றும் நாளையும் அனைத்துக் கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும். கடந்த காலத்தில் அத்தியாவசிய துறைகளை தவித்த மாநில அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது. மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான தனியார் அரசுப் பேருந்து போக்குவரத்துக்கு தடை.

வாடகை டாக்ஸி மற்றும் ஆட்டோக்கள் ஆகியவை இயங்கவும் தடை. அத்தியாவசிய பணிக்கு செல்வோர் உரிய ஆவணங்களுடன் பயணிக்க அனுமதி. மருந்தகங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் தேவைகளுக்கு தடை கிடையாது. பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் இயங்கும். சிலிண்டர் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு தடை கிடையாது. இவை அனைத்தும் வருகின்ற திங்கட்கிழமை முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வருகிறது.

Categories

Tech |