Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மழலையர் பள்ளிகள் திறப்பு?…. முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் கடந்த மாதம் வரையிலும் தமிழகத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பரவல் குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாள் ஊரடங்கு போன்றவை ரத்து செய்யப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இதனால் பொதுமக்கள் படிப்படியாக தங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் பிப்..15 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில்  ஊரடங்கு தேவைப்படுமா, கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட வேண்டுமா, இல்லை கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுமா, உள்ளாட்சி தேர்தல் 19 ஆம் தேதி வர இருப்பதால் எந்த மாதிரியான கட்டுப்பாடுகள் தேவை என்பது தொடர்பாக முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் இன்று (பிப்..12) நடைபெறுகிறது.

இந்நிலையில் வரும் 16ம் தேதி முதல் மழலையர் பள்ளிகளை திறக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து திறந்தவெளி , உள் அரங்கு பொருட்காட்சிகளுக்கும் அனுமதி வழங்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |