கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், மதிப்பெண் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் இருப்பதால் தேர்வு கட்டணங்களை மாணவர்கள் செலுத்த வேண்டும் என உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் கலை அறிவியல் மற்றும் பொறியியல் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் உயர்கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆனால் திடீரென மாணவர்களுக்கான கட்டணங்களை எப்படி மொத்தமாக செலுத்துவது என கேள்வி எழுப்பியுள்ளன. கொரோனா ஊரடங்கு காலத்தில் எழுதாத தேர்வுகளுக்கு… சான்றிதழ்கள் தயாரிக்க வேண்டும் என்று கூறி இப்படி கட்டணங்கள் வசூல் செய்வது நியாயமா ? என்று பெற்றோர்கள் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து, பெற்றோர்கள் வேதனையில் புலம்பி வருகின்றனர்.