Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தாக்கம் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டது.

தற்போது முதலாவது திருப்புதல் தேர்வு கடந்த 9 ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (பிப்.14) நடைபெறவுள்ள 10 ஆம் வகுப்பு அறிவியல் தேர்வு மற்றும் 12 ஆம் வகுப்பு கணித தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களில் கசிந்து பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து நாளை நடைபெற உள்ள 10-ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு சமூக அறிவியல் வினாத்தாளும் கசிந்தது. அதேபோல் பிப்ரவரி 17-ஆம் தேதி நடைபெற இருந்த ஆங்கில வினாத்தாளும் கசிந்துள்ளது. வினாத்தாள் கசிவு குறித்து பள்ளிக்கல்வித்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை திருப்புதல் தேர்வு விவகாரத்தில் 2 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியாகி இருந்தாலும் தேர்வு அட்டவணையில் மாற்றம் இல்லை என்று பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். 10 ஆம் சமூக அறிவியல், ஆங்கில தேர்வுகளுக்கான வினாத்தாள் கசிந்த நிலையில் நாளை நடைபெற உள்ள பிளஸ் 2 உயிரியல் வினாத்தாளும் கசிந்துள்ளது. இதையடுத்து தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Categories

Tech |