Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகளுக்கு…. முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.  இதுவரை 17 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் இதுதொடர்பாக முதல்வர் முக.ஸ்டாலின் கூறியபோது, கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதால் மாணவ- மாணவிகள் மிகவும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஒமிக்ரானில் இருந்து நம்மை தடுக்கும் கேடயம் முகக்கவசம் என்பதால் அனைவரும் கட்டாயம் அதை அணிய வேண்டும். தமிழகத்தின் பொருளாதாரம் மீண்டு வந்து கொண்டிருந்த நிலையில் ஒமிக்ரான் மிரட்ட தொடங்கி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |