ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு அனைவரும் தீபம் ஏற்றுங்கள் என அதிமுக சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக தலைமை சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு முக்கியமான கடிதத்தை எழுதி இருக்கிறார்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் விசுவாச தொண்டர்களுக்கு ஒரு கடிதம் என்ற தலைப்பில் அந்த கடிதம் எழுதப்பட்டு இருக்கிறது. ஜெயலலிதா அவர்கள் மண்ணுலகை விட்டு பிரிந்தாலும் அவர் ஒவ்வொரு நாளும் நம்முடைய செயல்களை பார்த்துக் கொண்டிருப்பதை நாங்கள் நம்புகிறோம்.
அவர்கள் உழைப்பாலும், தியாகத்தாலும் வளர்த்த இந்த இயக்கத்தை நாம் நேசிப்போம். அதேபோல இந்த இயக்கத்துக்கு தீங்கு செய்ய நினைப்போரை அறத்தின் வழியில் நின்று அழித்து, அம்மாவின் அம்மாவின் இயக்கத்தை காப்போம் நம்பிக்கை இருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
மேலும் கழக கண்மணிகளுக்கு ஒரு அன்பு வேண்டுகோள் என்றும், வரும் பிப்ரவரி 24ஆம் தேதி
இமைபோல் காத்தத ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று அனைவரது இல்லங்களிலும் மாலை 6 மணிக்கு தீபம் ஒன்றினை ஏற்றுங்கள். உயிர் மூச்சு உள்ளவரை ஜெயலலிதா வழியில் மக்களையும், மக்களுக்கான இந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இயக்கத்தையும் காப்போம். இது அம்மா மீது ஆணை என்று உறுதி ஏற்க வேண்டும் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்.