தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்வரிடம் பொதுமக்கள் பல்வேறு புகார்களை தெரிவித்த நிலையில் சென்னை ஆட்சியர் திடீரென மாற்றப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காண மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று நேரடி ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை ஆட்சியர்கள் நேரடியாக தணிக்கை செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது.