தமிழகம் முழுவதும் மினி ஊரடங்கு செயல்படுத்தப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். அதன் காரணமாக மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தில் முழு ஊரடங்கு இல்லை. மினி ஊரடங்கு தான் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி குறிப்பிட்ட தெரு, வீடு மற்றும் பகுதிகளில் மட்டும் ஊரடங்கு செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. முழு உறடங்கு என யூகத்தின் அடிப்படையில் பரப்பப்படும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். மேலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.