சென்னையில் மினி கிளினிக் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயபுரத்தில் மினி கிளினித் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் பரிசோதனைக்காக விரைவாக மேற்கொள்ளப்படும் என்று அவர் முன்பாகவே அறிவித்து இருந்தார். இது தொடர்ந்து இன்று காலை சென்னை ராயபுரத்திற்கு அவர் நேரில் சென்று மினி கிளினிக்கை தொடங்கிவைத்தார்.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 200 மினி கிளினிக் அமைக்கப்படுகிறது. அதில் முதற்கட்டமாக 47 இடங்களில் இது அமைக்கப்படுகிறது. மேலும் 20 இடங்களில் இன்று முதல் மினி கிளினிக்குகள் செயல்படத் தொடங்குகிறது.இந்த மினி கிளினிக் காலை 8மணி முதல் மதியம் 12மணி வரையிலும்,மலை 4மணி முதல் 8மணி வரையிலும் திறந்திருக்கும். கிராமப்புறங்களில் மாலை 7 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். ஒரு மருத்துவர் ஒரு செவிலியர் மற்றும் ஒரு மருத்துவப் பணியாளர்கள் இந்த மினி கிளினிக்கில் இருப்பார்கள்.
தமிழ் நாட்டில் தற்பொழுது 1851 சுகாதார நிலையங்கள் உள்ளது. 6 கிலோமீட்டர் தொலைவில் ஒரு மருத்துவமனையும் உள்ளது. இந்த மினி க்ளினிக் தொடர்ந்து பிறகு 3 கிலோமீட்டருக்கு ஒரு மருத்துவமனை இருக்கும். அங்கு சென்று கொரோனா தொற்று இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ளலாம். மேலும் சளி தலைவலி காய்ச்சல் போன்ற எளிதான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் பெரிய மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
மேலும் சேலம் மாவட்டத்திலுள்ள எடப்பாடியில் வரும் 16ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 40 மினி கிளினிக்குகள் தொடங்கி வைக்க உள்ளார். இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்டத்திற்கு உரிய அமைச்சர்கள் தொடங்கி வைக்க உள்ளார்கள்.இந்த மாத இறுதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் மினி கிளினிக்குகள் திறக்கப்பட வேண்டும் என்று திட்டமிட்டு பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.