Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மின்வெட்டு, மின் கட்டணம்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் மின்வெட்டு நடைபெறாது என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், சாய்ந்த மின் கம்பங்கள், மின்கம்பிகள் போன்றவை சரி செய்ய வேண்டிய நிலையில் இருந்த காரணத்தினால், தமிழகத்தில் அடிக்கடி மின் நிறுத்தம் ஏற்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் இவை அனைத்தும் தற்போது சரி செய்யப்பட்டு விட்டதாகவும், இனி தமிழகம் முழுவதும் மின்வெட்டு நடைபெறாது என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் தான் செய்யப்பட்டது. இதனை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். தற்போது அவை அனைத்தும் சரி செய்யப்பட்ட காரணத்தினால் இனி மின் நிறுத்தம் இருக்காது என்று கூறியுள்ளார். மேலும் மின்கட்டணம் குறித்தும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றது. மின் கட்டணத்தில் ஏதாவது தவறு இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |