Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மின் கட்டணம் செலுத்த இன்றே கடைசி நாள்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொது முடக்கம் காரணமாக மின் கட்டணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. பொது முடக்கம் காரணமாக நுகர்வோர் படும் கஷ்டத்தை கருத்தில் கொண்டு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் தாழ்வழுத்த நுகர்வோர் மின் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் மே 10 முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை இருந்த நிலையில், ஜூன் 15 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.

அதனைப்போலவே ஏப்ரல் மாதம் மின் கட்டணம் செலுத்தாத உயர்மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு தாமத கட்டணத்துடன் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் மற்றும் தாழ்வழுத்த மின் நுகர்வோருக்கான கூடுதல் வைப்புத் தொகையும் செலுத்த ஜூன் 15ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்ட அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.அதனால் மின் கட்டணம் செலுத்தாதவர்கள் இன்று மின் கட்டணம் செலுத்தி கொள்வது நல்லது.

Categories

Tech |