தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வேண்டும் என்று மக்கள் யாரும் கேட்கவில்லை என்று அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக முதல்வர் பல்வேறு ஆய்வுக் கூட்டங்களை நடத்திய ஆலோசனை வழங்கியுள்ளார்.அதன்படி தற்போது மின் தட்டுப்பாடு விவரங்கள் குறித்து மின்வாரிய பயன்கள் குறித்தும் தொடர்ந்து கேட்டறிந்தார். ரெட் அலர்ட் முடிக்கப்பட்டுள்ள நிலையில் மழைப்பொழிவு அதிகம் இருந்தாலும் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாக மின் தடை ஏற்படாது.
மழை நீர் தேங்கினால் மட்டுமே மின் தடை செய்யப்படும். ஓ பன்னீர்செல்வம் மின்கட்டணம் செலுத்த அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அது அவரின் தனிப்பட்ட கருத்து. மக்கள் யாரும் கருத்துக்களை முன்வைக்கவில்லை.இருந்தாலும் தமிழக முதல்வரிடம் இது குறித்து ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்கப்பட்ட அறிவிப்பு வெளியிடப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.எனவே மழை வெள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு இந்த மாத மின்கட்டணம் செலுத்த மேலும் கால அவகாசம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.