Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மின் வாரியத்தில்…. இதோ வந்துட்டு புது சிஸ்டம்….!!!!

 

சென்னை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் இயக்குநர்கள், தலைமை பொறியாளர்களுடன் இன்று ஆய்வுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் ராஜேஷ் லக்கானி, மேலாண்மை இயக்குநர் எஸ்.சண்முகம் மற்றும் உயர் அலுவலர்கள் போன்றோர் பங்கேற்றனர். இதையடுத்து மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “தமிழகத்தில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் 26000 விவசாயிகளூக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையில் மீதமுள்ள 74000 விவசாயிகளூக்கு மின் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 8950 மின் மாற்றிகள் அமைக்கும் பணியில் 8021 மின் மாற்றிகள் அமைக்கபட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மீதம் உள்ள மின் மாற்றிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மழைக் காலங்களில் பில்லர் பெட்டிகள் எளிதில் சேதமடைந்து விடுவதால் அவர்களை உயர்த்தி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரையிலும் மழையால் பாதிக்கப்பட்ட 340 பில்லர் பெட்டிகள் 1 மீட்டர் அளவுக்கு உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளது. தமிழக மின்வாரியம் முழுவதும் கணினி மயமாக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த ஆட்சியில் 1 கோடி மின் இணைப்புதாரர்களின் தொடர்பு எண்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 2 கோடியே 99 லட்சம் மின் இணைப்புதாரர்களின் தொடர்பு எண்கள் சேகரிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையில் எங்கேயாவது திடீரென்று மின் கசிவு ஏற்பட்டாலோ, மின் விபத்து ஏற்பட்டாலோ தானியங்கி முறையில் டிரான்ஸ்பார்மர் ஆப் ஆகும்படியான முறை அனைத்து இடங்களிலும் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதன் மூலமாக மின் கசிவு ஏற்பட்டால் மின்வாரிய ஊழியர்கள் நேரில் சென்று டிரான்ஸ்பார்மர் நிறுத்த வேண்டிய அவசியம் இருக்காது. தானியங்கி முறையில் டிரான்ஸ்பார்மர் தானாகவே ஆப் ஆகிவிடும். அதுமட்டுமல்லாமல் விரைவில் சென்னை 100 சதவீத புதைவட கம்பிகள் பொருத்திய நகரமாக மாற்றப்படும்” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

Categories

Tech |