கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையில் இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில், பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றது. குறிப்பாக பிற மாவட்டங்களில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை பரவலை கட்டுப்படுத்த எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது ? மருத்துவ படிப்பில் தமிழக மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு… கொரோனாவால் முடங்கிக் கிடக்கும் தொழில் வளத்தை மீட்டெடுத்து புதிய தொழில்களைத் தொடங்குவதற்கு என்ன மாதிரியான விஷயங்களை மேற்கொள்ளலாம் ? என்பது குறித்த தான ஆலோசனை நடைபெற இருக்கிறது.
சென்னை:
கொரோனா வின் மையமாக, கொரோனாவின் கூடாரமாக தலைநகர் சென்னை விளங்கி கொண்டிருந்தபோது, தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டது. குறிப்பாக சென்னை மாநகராட்சி, அண்டை மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் முழு முடக்கம் உத்தரவுகளை பிறப்பித்தது. சென்னை மாநகராட்ச்சியில் உள்ள 15 மண்டலங்களை 5ஆக பிரித்து 3 அமைச்சர்கள் குழுவை நியமித்தது.அதே போல மண்டலங்களுக்கு ஒரு சிறப்பு அதிகாரியையும் தமிழக அரசு மேற்கொண்டு பல்வேறு பணிகள் முடுக்கி விடப்பட்டன. ஊரடங்கினால் பல்வேறு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, கொரோனா வீரியம் கட்டுக்குள் வந்தது.
குறைந்த பாதிப்பு:
கடந்த சில நாட்களாக கொரோனா படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. தினமும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான பாதிப்பு சென்னையில் மட்டும் பதிவாகிய நிலையில் தற்போது 1,200க்கும் கீழாக வந்துகொண்டிருக்கின்றது. இன்னும் இரண்டு மூன்று நாட்களில் ஆயிரத்துக்கும் கீழ் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக பார்க்கப்பட்டாலும், மற்ற மாவட்டங்களில் நிலைமை கவலைக்குரியதாக இருக்கின்றது. எனவே இதனை குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
37 மாவட்டத்திலும் உயிரிழப்பு:
சென்னையை தவிர்த்து ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாவின் தாக்கம், அதன் வீரியம் உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. சென்னையைப் போலவே ஏனைய அனைத்து மாவட்டத்திலும்…. சொல்லப்போனால் தமிழகம் முழுவதும் மீண்டும் ஒரு முழு முடக்கம் இருக்கும் என்றே கருதப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 37 மாவட்டங்களில் பரவியுள்ள கொரோனா அனைத்து மாவட்டங்களிலும் உயிர் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு மட்டும் இல்லாமல் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டுக்கொண்டே இருக்கின்றார்கள்.
ஊரடங்கால் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா:
தொடக்கத்தில் சென்னையும் இப்படி தான் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது. தற்போது சென்னையில் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு முடக்கத்தான் நல்ல முடிவு கிடைத்துள்ளது. முழு ஊரடங்கினால் தலைநகரில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு, நல்ல முடிவை கொடுத்துள்ளதால் அதே முடிவை அனைத்து மாவட்டங்களிலும் பின்பற்றலாமா ? அதற்கு எந்த மாதிரியான தளர்வுகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்கலாம் ? என்றும் ஆலோசிக்கப்பட்ட இருப்பதாக தெரிகிறது.
போக்குவரத்து சேவை நிறுத்தம்:
கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு மதுரை மாநகராட்சி பகுதியில் முடிவடைய இருந்த ஊரடங்கு மேலும் இரண்டு நாட்கள் நீட்டிக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இன்று தான் அதன் கடைசி நாள்…. இந்த நிலையில் தான் பிற மாவட்டத்தில் பரவிவரும் கொரோனவை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் போக்குவரத்து இயங்காது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழகம் முழுவதும் மீண்டும் பொதுமுடக்க உத்தரவு பிறப்பிப்பதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாக பார்க்கப்படுகின்றன.