Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும்…. அக்டோபர் 10 ஆம் தேதி…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு தமிழகம் முழுவதிலும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் 12, 19, 26 ஆகிய தேதிகளில் 3 மாபெரும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. அதில் அரசு நிர்ணயித்த இலக்கை விட மக்கள் அதிகமாக சென்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

இந்நிலையில் இது குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நாள்தோறும் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பயனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு வீடுகளுக்கே சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தொடர்ந்து மூன்று வாரங்களாக நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்கள் மிகச்சிறப்பாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலான வகையில் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

காந்தி ஜெயந்தி என்ற கிராம சபை கூட்டம் நடைபெற இருப்பதால் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 10ஆம் தேதி 50 ஆயிரம் இடங்களில் பெரிய அளவிலான நான்காவது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |