தமிழகத்தில் வட சென்னை, தூத்துக்குடி மற்றும் மேட்டூர் என ஐந்து அனல் மின் நிலையங்களில் இன்னும் நான்கு நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து தமிழகத்தில் மீண்டும் மின் தடை ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நிலக்கரி இந்தியா நிறுவனத்திடம் இருந்து தமிழகத்திற்கான நிலக்கரி சப்ளையும் பாதியாக குறைந்துள்ளது.
சர்வதேச அளவில் நிலக்கரி தேவை அதிகரித்து இருப்பதே இதன் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் மின் தடை ஏற்படலாம் என்ற தகவல் வெளியாகி இருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.