தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னாபிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவிலும் கால் பதித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 500க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஊரடங்கு கட்டுபாடுகள் விதித்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு 50 ஐ நெருங்கி வருகிறது. இதனால் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இந்த கூட்டத்தில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறுவது குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது.
பள்ளிகள் திறப்பு குறித்து கல்வியாளர்கள் மற்றும் மருத்துவ வள்ளுவர் கூறியது, 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளுக்கு பள்ளிகளை மூட வேண்டும். 9 முதல் 12 வரை மாணவர்களுக்கு பொது தேர்வை கருத்தில் கொண்டு பள்ளியை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். அதனைப்போலவே WHO Aதலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கூறியது, ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விட தடுப்பூசிகள்தான் சிறந்த தீர்வு என்று அவர் தெரிவித்துள்ளார்.