அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று தனியார் கல்வி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளது. அதாவது அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக முதலில் 1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை விடுமுறையை அறிவித்தது.
ஆனால் பொதுத்தேர்வு எழுதும் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. பின்னர் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்ததால் ஜனவரி 31-ஆம் தேதி வரை அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை என அறிவித்து பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டது. இதனால் தற்போது ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் தனியார் கல்வி நிறுவனங்கள் மீண்டும் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளது. இதற்கிடையே மருத்துவ குழு கொரோனா பரவல் பிப்ரவரி மாத இறுதிக்குள் குறையும் என்று தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல் மாணவர்களுக்கு தடுப்பூசியும் முறையாக செலுத்தப்பட்டுள்ளதால் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று தனியார் பள்ளி நிர்வாக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதனால் பள்ளிகள் விரைவில் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.