Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு?…. மருத்துவர்கள் சொன்ன கருத்து….!!!!!

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களில் அனைத்து மாநிலங்களிலும் அரசு மற்றும் தனியார் துறைகளும் முடக்கபட்டது. இதையடுத்து கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டது. இதன் காரணமாக மாணவர்களின் நேரடி கற்றல் முறையானது பாதிக்கப்பட்டுள்ளது. அதன்பின் கடந்த ஆண்டு தொற்று தாக்கம் சற்று குறைந்த பின்பு செப்டம்பர் மாதம் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கும், நவம்பர் மாதம் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில் ஒமைக்ரான் வகை கொரோனா பரவ தொடங்கியதால் பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு சிபிஎஸ்இ , நர்சரி மெட்ரிக் பள்ளிகள் சங்கத்தின் சார்பாக அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களையும் சந்தித்து பள்ளிகளை திறக்க வலியுறுத்தி மனு கொடுக்க இருப்பதாகவும், அத்துடன் பள்ளிகள் திறப்பு கோரிக்கையை தமிழக அரசிடம் நேரடியாக வலியுறுத்த தயாராகியும் வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து தியேட்டர்கள், பார்கள் ஆகியவற்றையெல்லாம் திறந்து இருக்கும் சூழ்நிலையில் மாணவர்களுக்கு கல்வி வழங்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்திருப்பது சரி இல்லை. ஆகவே பள்ளிகளை திறக்க வேண்டும் என தமிழ்நாடு சிபிஎஸ்இ , நர்சரி மெட்ரிக் பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில், கொரோனா தொற்றின் வேகம் பிப்ரவரி 2 வது வாரம் அல்லது 3 வது வாரத்தில் தான் குறைய வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கருத்து முன்வைக்கின்றனர். இதனால் பள்ளிகளை தற்போது திறப்பது என்பது தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும் என்று தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |