Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும் மூடப்படும் பள்ளிகள்?…. வலுக்கும் கோரிக்கை….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததால் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா ? என்ற அச்சம் எழுந்துள்ளது. மே மாதம் 13ஆம் தேதி 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடைசி வேலை நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அச்சம் எழுந்துள்ளது. மேலும் கொரோனா பரவல் வரும் நாட்களில் அதிகரிக்கும் பட்சத்தில் பள்ளிக்கல்வித்துறை 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை மூடுவது குறித்து பரிசீலனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் நேரடி வகுப்புகள் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு மட்டும் நடத்தலாம் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

Categories

Tech |