Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?…. வெளியான தகவல்…!!

தமிழகம் முழுவதும் 1 முதல் 9 வரை மாணவர்களுக்கு மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளித்து பள்ளி கல்வித்துறை அறிவித்தது. மேலும் மீண்டும் பள்ளிகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவித்திருந்தனர். இந்நிலையில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு விடைத்தாள்களை சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் ஜூன் மாதத்தில் திருத்தவுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் ஆசிரியர்கள் பயிற்சி, பள்ளி உள்கட்டமைப்பு மேம்படுத்துதல் போன்றவை நடைபெறுவதால் 1 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாதம் இறுதியில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளி கல்வித்துறை சார்பில் விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |