தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஆன்லைனில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் மட்டுமே அனுபவித்து வந்ததால் மாணவர்களின் கற்றல் திறன் குறைந்துள்ளதாக ஆய்வுகள் வெளியிடப்பட்டது. இதனால் விரைந்து பள்ளிகள் நேரடி முறையில் செயல்பட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பியதால் நடப்பு கல்வியாண்டில் வழக்கம் போல் ஜூன் மாதம் முதல் நேரடி வகுப்புகள் தொடங்கியது. இந்நிலையில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மாணவர்கள் பல மாதங்கள் வீட்டில் இருந்து பழகி விட்டனர். தற்போது தொடர்ச்சியாக பள்ளிக்கு வருவது அவர்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கும்.
அதனால் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே பள்ளிகள் செயல்பட வேண்டும் என்றும் சனிக்கிழமையில் கட்டாயம் அனைத்து மாணவர்களும் விடுமுறை அளிக்க வேண்டும், அரசின் உத்தரவு மீறி செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது மாவட்ட நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைக்கப்பட்டுள்ளது. அதில், கொரோனா கால விடுமுறைகள் காரணமாக மாணவர்கள் கற்றல் இழப்புகளை சந்தித்துள்ளனர். இதனால் பொது தேர்வு எழுத இருக்கும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறிப்பிட்ட நாளுக்குள் பாடத்திட்டங்களை முடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதற்கு உதவியாக இருக்கும் வகையில் பொது தேர்வு மாணவர்களுக்கு மட்டும் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்த அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முடிவு தமிழக அரசு பள்ளி கல்வித்துறை விரைந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.