Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும் தேர்வு – தமிழக அரசு முடிவால் மாணவர்கள் ஷாக் …!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு இறுதிப்பகுதி பருவத்தேர்வு தவிர பிற தேர்வுகளை இரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதேபோல அரியர் தேர்வு ரத்து செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தனார் ஆகியோர்  வழக்கு தொடுத்தார்கள்.

இந்த வழக்கு ஏற்கனவே பதிலளித்த பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டது விதிகளுக்கு முரணானது என்று தெரிவித்தது. மேலும் அரியர் தேர்வு ரத்து செய்ய பல்கலைக்கழகங்களுக்கு அதிகாரம் உள்ளதாகவும், மாணவர்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தமிழக அரசு ஏற்கனவே விளக்கமளிக்கப்பட்டது.

இந்த நிலையில் பல்கலைக்கழகங்கள் அரியர் தேர்வை ரத்து செய்து அதன் முடிவுகளை வெளியிட்டு வருவதாக மீண்டும் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ பல்கலைக்கழகங்கள் தேர்வை நடத்த வேண்டும் என்றும், அதற்கு  தேவையான நடவடிக்கை எடுத்து, அரியர் ரத்து செய்து அதன் முடிவை வெளியிடுவதற்கு ஏற்கனவே ஓர் இடைக்காலத் தடையும் விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாணவர்களுடைய நலன் கருதியே முன்பு அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதாகவும்,  தற்போதைய சூழலை கருத்தில் கொண்டும், கொரோனா சூழல் தற்போது மாறியுள்ளதால் பல்கலைக்கழகங்கள் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தேர்வு நடத்த முடிவு செய்துள்ளதாக ஒரு விளக்கம் அளித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அறியார் தொடர்பான தேர்வு அட்டவணையை அனைத்து பல்கலைக்கழகங்களும் பிப்ரவரி 4ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணை மீண்டும் தள்ளி வைத்துள்ளார்.

Categories

Tech |