தமிழகத்தில் ஒரு தெருவில் மூன்று பேருக்கு மேல் கொரோனா இருந்தால் அந்தப் பகுதி மைக்ரோ கட்டுப்பாட்டுப் பகுதியாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது.
இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தில் தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆனால் ஒரு தெருவில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அந்தத் தெரு மைக்ரோ கட்டுப்பாட்டுப் பகுதியாக மாற்றப்படும். அந்த தெருவில் இருந்து மக்கள் உள்ளே வரவும் வெளியே செல்வதும் தடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.