Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும்…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. தற்போது தமிழகத்தில் 11 மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் நகரப் பேருந்துகள் மட்டும் இயக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 50% பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகங்கள் ஆயத்தமாக உள்ளதாகவும், இந்த வார இறுதிக்குள் பேருந்துகளை இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் மாவட்டத்துக்குள் மட்டும் பேருந்து சேவை இயங்கும் என தெரிகிறது.

Categories

Tech |