Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் முக்கிய அறிவிப்பு ….. தமிழக முதல்வர் முடிவு …!!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெறுகின்றது.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக தலைநகர் சென்னை கொரோனாவின் மையமாக விளங்கிய சூழலில், முன்மாதிரியான பல முயற்சிகளை மேற்கொண்ட தமிழக அரசு, சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் சிறப்பு அதிகாரிகளை நியமித்தது. ஐந்து அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து கண்காணிப்பு பணிகள், தடுப்பு நடவடிக்கைகள் என தமிழக அரசின் முயற்சியால் சென்னையில் கொரோனா தற்போது கட்டுக்குள் வந்ததுள்ளது.

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா பிற மாவட்டங்களில் அதன் கோரா தாண்டவத்தை காட்டி வருகின்றது. கடந்த சில நாட்களாகவே சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பரவிவரும் கொரோனா பாதிப்பு  அரசை நடுங்க வைத்துள்ளது. குறிப்பாக மதுரை, தேனி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருந்து வருகின்றது.

இந்த நிலையில் தான் இன்று மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் பேசப்படுகின்றன. குறிப்பாக தென் மாவட்டங்களில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் ? சென்னையைப் போன்று அனைத்து பகுதிகளிலும் முடக்கத்தை அறிவித்து கட்டுப்படுத்தலாமா ? அதற்கென்று தனி குழுக்களை அமைக்கலாமா ? போன்ற பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட இருக்கின்றன.

எனவே இந்த அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. இந்த கூட்டத்தில் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என்று முதல்வர் முடிவெடுப்பார் என்று தெரிகின்றது.

Categories

Tech |