தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் வளமான தமிழ்நாடு, மகிழும் விவசாயி, உயர்தரக் கல்வி, மருத்துவம், எழில்மிகு மாநகரங்களின் மாநிலம், உயர்தர ஊரக கட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கைத் தரம், அனைவருக்கும் அனைத்தும் ஆன தமிழகம் ஆகிய ஏழு இலக்குகளை அடைய மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் பொது விநியோகத் திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும். மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளார்.