தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். மக்களின் குறைகளை முன்னதாகவே கேட்டறிந்து அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா பிரச்சனைக்கு தீர்வு காண கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு தாலுகாவிலும் புதன் மற்றும் வெள்ளிக் கிழமை என வாரம் இரண்டு வருவாய் கிராமங்களில் முகாம்கள் நடத்த வேண்டும். தாலுகாவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சிறப்பு முகாம்களை டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.