தமிழகம் முழுவதுமாக உள்ள அனைத்து முதியோர் இல்லங்களையும் கண்காணிக்க ஒரு அமைப்பு உருவாக்க கோரி கிருஷ்ணமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் முதியோர் இல்லங்களில் ஆய்வு செய்வது, பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை எடுப்பது, பதிவு செய்வது கட்டாயம் உள்ளிட்ட ஆணைகளை தமிழக அரசு 2016 ஆம் ஆண்டு பிறப்பித்தது. இந்த அரசாணை அமல்படுத்தப்படவில்லை என்று கிருஷ்ணமூர்த்தி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழகத்தில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களையும் ஆய்வு செய்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அது தொடர்பான அரசாணை அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். முதியோர் இல்லங்களில் தங்கி இருப்பவர்கள் மற்றும் அதனை நிர்வாகிக்கும் நிர்வாகிகளின் விவரங்களையும் அரசு பராமரிக்க வேண்டும். குறைபாடுகளை சுட்டிக்காட்டிய பின்னரும் நிவர்த்தி செய்யாத முதியோர் இல்லங்களின் பதிவுகளை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களும் கட்டாயமாக பதிவு செய்வதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.