தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அது மட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு புதிய பாதுகாப்பு கட்டுப்பாடுகள் அமல்படுத்தியுள்ளது. அதன்படி உணவகங்கள் மற்றும் திரையரங்குகளில் 50% பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். சனி, வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டுள்ளது. மேலும் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோய் தடுப்பு பணியில் மருத்துவத் துறையின் பங்கு தான் அவசியமானது. எனவே முன்களப்பணியாளர்களுக்கு மார்ச் மாதம் இறுதி வரை விடுமுறை வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் தற்போது 27,76,413 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா பரவல் 2022 மார்ச் இறுதி வரை அதிகரிக்கும் என்பதால் முன்களப் பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகள், சிறப்புநிலை சுகாதாரப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், கட்டுப்பாடு மையங்களில் பணிபுரியும் போலீசார், ஊர்காவல் படையினர் உள்ளிட்ட அனைத்து முன்களப்பணியாளர்கள் விடுமுறை எடுக்கக்கூடாது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் அவசர தேவைகளுக்கு மட்டும் விடுப்பு தேவையென்றால் மருத்துவக் கல்லூரி முதல்வர், பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.