Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மும்முனை மின்சாரம் நிறுத்தம்… பெரும் அதிர்ச்சி செய்தி…!!!

தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு 24 மணி நேரம் வழங்கப்பட்ட மும்முனை மின்சாரம் நிறுத்தப்பட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதற்கு முன்னதாக அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவியது. அதுமட்டுமன்றி இரண்டு கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களை கவரும் வகையிலான பல்வேறு வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கை மூலம் வெளியிட்டனர். அதன்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் 1 முதல் தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும் என அறிவித்தார்.

ஆனால் ஏப்ரல் 6 தேர்தல் முடிந்த நிலையில் மும்முனை மின்சாரம் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். 24 மணி நேர மின்சாரத்தை நம்பி குறுவை சாகுபடி செய்ததாகவும் தற்போது மின்சார 10 மணி நேரமாக குறைக்க பட்டதாகவும் டெல்டா விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Categories

Tech |