Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மே 31-ஆம் தேதி வரை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை. அதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பலத்த  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தாழ்வழுத்த மின் நுகர்வோர்கள் மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகை செலுத்த மே 31-ஆம் தேதி வரை அவகாசம் அளித்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடைசி நாள் மே 10 முதல் 24ஆம் தேதி வரை இருப்பின் மே 31 வரை மின் கட்டணம் செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் பேமென்ட் கேட்வே, பிபிபிஎஸ் மூலம் மின் கட்டணத்தை செலுத்தலாம்.

Categories

Tech |