மாவட்டந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வீட்டுவசதி வாரியம் சார்பாக குடியிருப்புகள் கட்டப்படும் என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். அதாவது சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதத்தின் போது திமுக பொன்னுசாமி, நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதியில் 5 பேரூராட்சிகள் இருக்கின்றன. ஆனால் அங்கு சொந்தமாக வீடு இல்லாதவர்கள் அதிகம் இருக்கின்றனர். கொரோனா காலக் கட்டத்தில் வாடகை செலுத்த முடியாமல் அவர்கள் சிரமப்பட்டனர்.
இதனால் அந்த பகுதி மக்களுக்கு வீட்டுவசதி வாரியம் சார்பாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தர வேண்டும். இதையடுத்து அமைச்சர் முத்துசாமி பேசியபோது, அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அவசியம் என்றால் வீடு கட்டிக் கொடுக்கபடும். இதற்கிடையில் பல்வேறு இடங்களில் கட்டப்பட்ட கட்டிடங்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருக்கின்றன். ஆகவே அதனை ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பின் பொன்னுசாமி கூறியதாவது, கிராம ஊராட்சியில் வீடு கட்டும் திட்டம் நடைமுறையில் இருக்கிறது.
ஆனால் பேரூராட்சியில் இல்லாததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகவே பேரூராட்சியிலும் வீடுகட்டும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அ.தி.மு.க. ராதாகிருஷ்ணன் கூறியதாவது, உடுமலைப் பேட்டையில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் பழுதடைந்து இருப்பதால், அதை புனரமைத்து சுற்றுச்சுவர் கட்டித் தர வேண்டும் என்று கூறினார். அமைச்சர் முத்துசாமி பேசியதாவது, வாடகை குடியிருப்பாக இருந்தால் வாரியம் சார்பாக சரிசெய்து தரப்படும். மிகவும் மோசமான நிலையில் உள்ள குடியிருப்புகளை கணக்கெடுத்து இருக்கிறோம். அதை புதிதாக கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.