Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில்… அரசு வெளியிட்ட பரபரப்பு உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும் தமிழக உணவு வழங்கல் துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டு வகைகளில் அரிசி அடை, சர்க்கரை அட்டை, அத்தியாவசிய பொருள்கள் எதுவும் கிடைக்காத அட்டை என மொத்தம் ஐந்து வகையான அட்டைகள் இருக்கின்றன. அதன்படி 1,96,16,000 குடும்ப அட்டைகள் இருக்கின்றன. அனைத்து ரேஷன் கடைகளிலும் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு விற்பனையாளர் மட்டுமே டாலர் என இருவர் பணியாற்றி வருகிறார்கள். ஆனால் பல கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது.

அதனால் இரண்டு பேரின் வேலைகளை ஒருவரே செய்கிறார். அதனால் ரேஷன் கடைகளில் பொருட்களை விரைவாக வழங்கும் வகையில் கூடுதலாக நியமிக்க உணவு வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. இதுபற்றி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. ஆனால் அதில் அலட்சியம் காட்டப்பட்டு வருகிறது. தற்போது வரை ஊழியர்கள் நியமனம் செய்யப்படவில்லை. இந்நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள் தங்கள் பணி சுமையை குறைப்பதற்காக சில ஊழியர்களை முறைகேடாக நியமித்து வேலை வாங்கி வருகிறார்கள்.

இது பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு உணவுத்துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி ரேஷன் கடைகளுக்கு உள் வெளி நபர் யாரும் அனுமதிக்கக் கூடாது. அதே நேரத்தில் வேலையில் இருக்கும் ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டையை கட்டாயம் அறிந்து இருக்க வேண்டும். கடைகளை மிகவும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும் ரேஷன் கடை ஊழியர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப வெளி நபர்களை வேலையில் அமர்த்தினால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

Categories

Tech |