Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில்…. அமைச்சர் சொன்ன சூப்பர் நியூஸ்…!!!

பட்ஜெட் குறித்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மணப்பாறை உறுப்பினர், ரேஷன் கடைகளில் தரமில்லாத அரிசி வழங்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு பதில் அளித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து எங்களைத் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ள அறிவுறுத்தி வருகிறார். ரேஷன் கடையில் அரிசி தரத்தை ஆய்வு செய்து மக்களுக்கு நல்ல தரமான அரிசி வழங்க வேண்டும் என்று அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம் .

குறிப்பாக ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாய விலை கடையில் முதல்வரே நேரடியாக சென்று ஆய்வு செய்தார். இவ்வாறு அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதன் காரணமாக ரேஷன் கடைகளில்  தரமான அரிசி தான் வழங்கப்படுகிறது. தனியார் அரிசி ஆலை முகவர்கள் அனைவரையும் அழைத்து மாதம் 5 முறை கூட்டங்கள் நடத்துகிறோம். கடந்த சில காலங்களில் அரிசி பழுப்பு நிறமாகவும், கருப்பாகவும் சில நியாயவிலை கடைகளில் இருந்ததால் அவற்றை மாற்ற Colour Sorter பொருத்த வேண்டும் என்று தனியார் அரிசி ஆலைகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். வரும் 30ஆம் தேதிக்குள் அனைத்து தனியார் அரிசி ஆலைகளிலும் Colour Sorter பொருத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |