தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகளின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ரேஷன் பொருட்கள் வினியோகம் தொடர்பாக, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட வழங்கல் அதிகாரிகளுடன், நேற்று ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளார். அந்த ஆய்வுக் கூட்டத்தில் அவர் கூறியதாவது, மழைக்காலம் மற்றும் பண்டிகை காலம் ஆரம்பிக்க இருப்பதால் ரேஷன் கடைகளுக்கு கிடங்குகளில் இருந்து தடையில்லாமல் முன்கூட்டியே உணவுப் பொருட்களை அனுப்ப வேண்டும்.
மேலும் கடைகளில் கார்டுதாரர்களுக்கு பொருட்களை விரைந்து வழங்க வேண்டும். மழைத்தண்ணீர் படாத அளவிற்கு உணவு தானியங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும். புதிய ரேஷன் கார்டுகளை வழங்கும் பணிகளையும் விரைவில் முடிக்க வேண்டும். இவ்வாறாக சக்கரபாணி பேசியுள்ளார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசுகையில், தமிழக எல்லையோர மாவட்டங்களில் அரிசி கடத்தலை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அரிசி கடலுக்கு துணைபோகும் அதிகாரிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.