Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில்… வெளியான புதிய அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதிலும் கடந்த சில மாதங்களாக மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்படத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில்வெளி மாநிலங்களை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இனி ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தொழிலாளர் உதவி ஆணையர் தாமரை மணாளன் அறிவித்துள்ளார்.

அதன்படி வெளி மாநிலங்களை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் எந்த ஒரு ரேஷன் கடைகளிலும் உணவுப் பொருள்களைப் பெற்றுக் கொள்ள முடியும். அவர்களிடம்  தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு உட்பட்ட குடும்ப அட்டை அல்லது அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டை இருக்க வேண்டும். பொருட்களை வாங்குவதற்கு அட்டைகளை கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக ஆதார் அட்டை எண் மற்றும் கைரேகை பதிவு மட்டுமே போதுமானதாகும்.

மேலும் இந்த விவரங்களை சரிபார்த்தவுடன் ரேஷன் கடைகளில் இருந்து அரிசி அல்லது கோதுமையை பெற்றுக்கொள்ளலாம். குறிப்பாக அரிசி ஒரு கிலோவுக்கு ரூ.3 மற்றும் கோதுமை ஒரு கிலோவுக்கு ரூ.2 மட்டுமே கொடுக்க வேண்டும். மேலும் ஒரே தவணை முறையிலும் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். இது தவிர தொழிலாளர்கள் சீனி, எண்ணெய் போன்ற பொருட்களையும் குறிப்பிட்ட அளவுகளுக்குள் வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |