Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உதவக்கூடிய வகையில் அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை முதலிய ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பு மக்களுக்கும் இது உதவுகிறது. ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக வயதானவர்கள் அவ்வாறு நின்று பொருட்களை வாங்குவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. தற்போது அனைத்து ரேஷன் கடைகளிலும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதில் பயோமெட்ரிக் மிஷினல் விரல் பதிவு செய்து பொருட்கள் பெறும் வசதி வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் முதியோர் மற்றும் வயதான பெண்கள் ஆகியோருக்கு பயோ மெட்ரிக் முறையில் பதிவு பதிவாகாத நிலை சில சமயங்களில் ஏற்படுகிறது. இந்நிலையில் வயதானவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகிறது. இதுகுறித்து அக்டோபர் 7ஆம் தேதி சிவில் சப்ளை கமிஷனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், முதியோர் கைரேகை பதிவாக விட்டாலும் பதிவேடுகளில் பதிவு செய்துவிட்டு பொருள்கள் வழங்கலாம் என கூறியுள்ளார். எனவே இனி முதியவர்கள் கைரேகை பதிவாக விட்டாலும் பொருட்களை வாங்கி கொள்ளலாம். ஆனால் அவர் கொண்டு வரும் ரேஷன் கார்டில் அவரது பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |