தமிழகத்தில் ரேஷன் கார்டுகளில் இறந்துபோன 10.63 லட்சம் பேரின் பெயர்களை நீக்கும் பணியை உணவுத்துறை தொடங்கியுள்ளது. ரேஷன் கார்டில் உள்ள நபர்கள் உயிர் இழந்தால் அவரது பெயரை ரேஷன் கார்டில் இருந்து நீக்க வேண்டும். பல காடுகளில் இறந்தவர்கள் பெயர் நீக்கப்படாமல் அப்படியே உள்ளது. அதனால் தொடர்ந்து அவர்களுக்கும் சேர்த்து ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதையடுத்து 4 ஆண்டுகளில் இறந்தவர்களின் விவரங்களை உணவு வழங்கல் துறை பெற்றுள்ளது. அவற்றை கார்டுதாரர்கள் ஆதார் எண்ணுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது ஏற்கனவே இறந்து போன 10.63 லட்சம் பேர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களின் பெயர்களை நீக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது.