தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி, வெல்லம், வேஷ்டி, சேலை உள்ளடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். ஆனால் கடந்த பொங்கல் பண்டிகையின் போது மக்கள் 2000 ரூபாய் பொங்கல் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித் தூள், நெய், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு , கடலைப்பருப்பு, ரவை, கோதுமை மாவு , உப்பு, மிளகு, புளி ஆகிய 20 பொருள்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதற்காக ரூ.1088 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.