Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்கள் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயனடைகின்றனர். 5 வகையான ரேஷன் கார்டுகள் இருக்கிறது. அதில் முன்னுரிமை அடிப்படையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மே மாதம் ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு 4000 ரூபாய் கொரோனா நிவாரணத்தொகை 2 தவணையாக வழங்கப்பட்டது. மேலும் மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது. இதனையடுத்து தற்போது 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசிகள் செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்னும் சிலர் முதல் டோஸ் தடுப்பூசிகளையே செலுத்தாமல் இருக்கின்றனர். இந்த நிலையில் கொரோனாவில் இருந்து உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் இதுவரையிலும் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இதனால் தடுப்பு பணிகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்த இரண்டு தடுப்பூசிகள் செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட அரசின் அனைத்து சலுகைகளையும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என வணிகர் சங்க பேரமைப்பின் பொதுக்குழு தலைவர் வலியுறுத்தியுள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ள நிலையில் இத்தகைய கோரிக்கைகள் எழுந்து வருவதால் ரேஷன் அட்டைதாரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Categories

Tech |