தமிழகத்தில் ரேஷன் கடைகளில் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்புடன் இந்த மாதத்திற்கான வழக்கமான அத்தியாவசிய பொருட்களையும் சேர்த்து வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அறிவுரை வழங்கப்பட்டது. ஜனவரி 10-ஆம் தேதி வரை சில மாவட்டங்களில் 87 சதவீதமும், ஒட்டு மொத்தமாக 65.3 சதவீதமும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்புடன் இந்த மாதத்திற்கான பொருள்களை இன்று முதல் வினியோகம் செய்ய வேண்டும். இதில் புகார்களுக்கு இடமளிக்காமல் உரிய கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.