Categories
மாநில செய்திகள்

பொங்கல் பணம்: தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை ரேஷன் கடைகள் மூலமாக அரசு, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கி வருகின்றது. அதனால் ரேஷன் ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளதால் ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து பரிசு தொகுப்பு வினியோகிக்கும் ரேஷன் ஊழியர்களுக்கு கார்டுக்கு 50 காசு வீதம் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களுக்கு உரிய அறிவுரை வழங்கி ஊக்கத்தொகை வழங்கப்படுவதை கண்காணிக்குமாறு மண்டல இணைப்பதிவாளர் கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு ரேஷன் கடை ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |