Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் முன்பு…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களை பெறும் அட்டைதாரர்களை தவிர்த்து வெளிநபர்கள் ரேஷன் கடைக்கு முன்பு கூட்டமாக இருப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கு வேண்டுமென மண்டல இணை பதிவாளர்களை, கூட்டுறவு துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும், பணபலம் படைத்த சுயேச்சை வேட்பாளர்களும், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இதில் ஆளும் கட்சியாகவுள்ள தி.மு.க.,வும், கூட்டுறவு சங்கங்களின் தலைவர்களாக உள்ள அ.தி.மு.க.,-வும் தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி, ரேஷன் கடைகளிலேயே பணப்பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.

அதிலும் குறிப்பாக தி.மு.க., வினர் குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 உரிமை தொகை வழங்குவதற்கான விண்ணப்பம் என்று போலியான விண்ணப்பங்களை, ரேஷன் ஊழியர்களிடம் வழங்கி, கார்டுதாரர்களிடம் தருமாறு கூறுகின்றனர். இந்நிலையில் நாளை(பிப்..19) ஓட்டுப்பதிவு நடக்க இருப்பதால் பணப்பட்டுவாடா தீவிரமாக நடைபெறுகிறது.

இதனிடையில் ரேஷன் கடைகளில் அரசியல் பிரமுகர்கள் புகைப்படம் உள்ள போஸ்டர்கள் அல்லது விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும். பொருட்கள் பெறும் அட்டைதாரர்களை தவிர்த்து வெளிநபர்கள் கடைக்கு முன் கூட்டமாக இருப்பதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Categories

Tech |