தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதன் காரணமாக மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கடந்த மாதம் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கப்பட்டது. அதன் பிறகு இரண்டாவது தவணை 2000 ரூபாய் பெறுவதற்கான டோக்கன் வினியோகம் நேற்று தொடங்கியது.
மேலும் ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 13 வகையான மளிகைப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டத்தை ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார். அதன்படி கோதுமை, உப்பு, ரவை, சர்க்கரை, உளுத்தம் பருப்பு, மஞ்சள் தூள், குளியல் சோப் மற்றும் துணி சோப்பு உள்ளிட்ட 13 வகை பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இதுகுறித்து முதல்வருடன் அமைச்சர் பெரியசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.