Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விரைவில்?…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…..!!!!!

தமிழகத்தில் கடந்த 2021 ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர் பல்வேறு வகையான வாக்குறுதிகளை அளித்தார். அதில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அவர்களுக்கு இலவச பேருந்து பயணம், ரேஷன் கடைகள் வாயிலாக குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாக்குறுதி அளித்தபடி இலவச பேருந்து பயண திட்டத்தை ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றினார்.

ஆனால் குடும்பத் தலைவிகளுக்கு இதுவரையிலும்  1,000 ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் அரசிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது திமுக தலைமையிலான அரசு குடும்ப தலைவிகளுக்கான 1000 ரூபாய் வழங்காததை சுட்டிகேகாட்டி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் போலியான விண்ணப்பம் பல்வேறு பகுதிகளில் தயாரித்து விநியோகம் செய்வதாக புகார்கள் எழுந்தது.

தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்த நிலையில் வெற்றியின் பரிசாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வர் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களின் விபரங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |