நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு சம்பள சீட்டு வழங்க வேண்டும் என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவு சங்க நியாயவிலை கடைகளில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த நியாயவிலை கடையில் அரிசி, பருப்பு, மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருள்கள் குறிப்பிட்ட எடையில் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதன்பிறகு பாமாயில், சோப்பு போன்றவைகள் தேவைக்கேற்ப கட்டுப்பாடற்ற பிரிவில் வழங்கப்படுகிறது. இந்தப் பொருள்களை பொதுமக்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம். ஆனால் விலை அதிகமாக இருப்பதால் மக்கள் சிலர் இந்த பொருட்களை வாங்குவதில்லை.
இதுபோன்ற காரணங்களுக்காக நியாயவிலை கடைகளில் தேங்கும் பொருட்களுக்குரிய தொகை ஊழியர்களின் ஊதிய தொகையில் பிடித்தம் செய்யப்படுகிறது. இதேப்போன்று நியாயவிலை கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களின் சம்பளம் பல காரணங்களுக்காக பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் சம்பள பிடித்ததற்கான கரணம் ஊழியர்களுக்கு தெரிவிக்கப் படுவதில்லை. இதன் காரணமாக நியாயவிலை கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு சம்பள சீட்டு வழங்க வேண்டும் என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.